உலகதாய் மொழி தினம் - 21 பிப்ரவரி 2016
தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்தவர்களின் தொண்டு மகத்தானது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து தமிழைக் கற்று இலக்கியம் படைத்தோர் பலர். நம் தாயகமாம் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமழ் இலக்கியத்திற்கு பெரும் பணியாற்றியவர்களுகம் உள்ளனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்தவர்களின் தொண்டு மகத்தானது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து தமிழைக் கற்று இலக்கியம் படைத்தோர் பலர். நம் தாயகமாம் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமழ் இலக்கியத்திற்கு பெரும் பணியாற்றியவர்களுகம் உள்ளனர்.
தமிழ் மொழியில் இலக்கியம், உரைநடை, சிறுகதை, நாடகம், புதினம் இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதி என பல துறைகளிலும் கிறித்தவர்களின் தொண்டு அளவிடற்கரியது.
வீரமாமுனிவர் :
இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரைக் கொண்டவர். தைரியநாதர் என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியில் ஏ, ஓ, செ, சே போன்ற எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்.
தூய வனன் என்னும் சூசையப்பரை காவிய நாயகனாகக் கொண்டு தேம்பாவனி என்னும் தீந்தமிழ்க்காப்பியத்தைப் படைத்தார். தொன்னூல் விளக்கம், ஐந்திலக்கண நூல், சதுரகராதி, கொண்டுந்தமிழ் இலக்கணம் கிலாவிஸ் போன்ற இலக்கண நூல்களை தமிழுலகிற்கு அளித்தார்.
திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை, அடைக்கலமாலை, அன்னை அழுங்கல் அந்தாதி போன்ற செய்யுள் நூல்களை எழுதியுள்ளார். பரமார்ந்த குருகதை என்ற சிறுகதை இலக்கியத்தை உண்டாக்கினார். வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், பேதக மறுத்தல் போன்ற சமயம் சார்ந்த நூல்களை வீரமாமுனிவர் எழுதியுள்ளார்.
இராபர்ட் டி நோபிலி
இத்தாலி நாட்டைச் சார்ந்த இவர் தமிழக மக்களால் ‘தத்துவ போதகர்வு’ என அழைக்கப்படுகிறார். தமிழகத் துறவிகள் போல அந்தணர் உடையணிந்து தழிழகப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தார். ஞான உபதேசக் காண்டம், இயேசுநாதர் சரித்திரம், மந்திரமாலை, புனர்ஜென்ம ஆட்சேபம், சல்லாபம், நீதிச்சொல், தத்துவக் கண்ணாடி, ஞானதீபிகை, பிறமத கண்டனங்கள், ஆத்ம நிர்ணயம், ஞான சஞ்சீவி போன்ற நூல்களையும் இயற்றி இலக்கியப்பணி ஆற்றியுள்ளார். தமிழ்;ப் போhர்ச்சுக்கீசிய அகராதியை உருவாக்கினார்.
சீகன் பால்க் ஐயர்
செர்மன் நாட்டைச் சார்ந்த இவர் தான் தமிழகத்திற்கு அச்சுப்பொறி இயந்திரத்தை 1709இல் கொண்டு வந்தார். பொறையாற்றில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். விவிலியத்தை தமிழில் வெளியிட்டார். இந்தியாவில் அச்சிடப்பட்ட (1715) முதல் நூல் இந்நூலாகும்.தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கணம், தமிழ் இலத்தீன் அகராதி போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
கால்டுவெல்
அயர்லாந்து நாட்டைச் சார்ந்த இப்பாதிரியாரின் சமயத்தொண்டும், இலக்கியத் தொண்டும் எண்ணி எண்ணி போற்றத்தக்கவை.திராவிடக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி மொழி ஒற்றுமையை வெளிப்படுத்தியவர். திருநெல்வேலி வரலாறு என்ற நூலை எழுதியவர். நற்கருணைத் தியான மலை, தாமரைத் தடாகம், ஞானக்கோயில், பரதகண்ட புராதனம் போன்ற நூல்களைத் தமிழுலகிற்கு அளித்தவர்.
எல்லீஷஸ் ஐயர்
சென்னை நகர ஆட்சியராக அரும்பணியாற்றியவர். திருக்குறளுக்கு அருமையான ஆங்கில உரையில் மொழி பெயர்ப்பு செய்தவர். வீரமாமுனிவர் வரலாற்றை தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுதி சாதனை படைத்தவர்.
ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவர் புறநானூற்றிலுள்ள பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழர்களின் பண்பாட்டு வாழ்க்கையை வெளிப்படுத்தியவர்.
உவின்ஸ் லோ என்பவர் தமிழ் ஆங்கில அகராதி எழுதியுள்ளார்.
ஹென்றி பாதிரியார் தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ் அச்சுக்கலையின் தந்தை என அழைக்கப்படுகிறார். தம்பிரான் வணக்கம், கிரிசித்தாணி வணக்கம் போன்ற நூல்களை படைத்தவர்.
ஜேம்ஸ் தே ரோஸி புனிதர்கள் சரித்திரத்தை எழுதியுள்ளார்.
செர்மன் நாட்டைச் சார்ந்த ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளை செர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.
செர்மன் நாட்டைச் சார்ந்த இரேனியஸ் என்பார் தமிழில் பேசவும் எழுதவும் வல்லவர். வேத உதாரணத் திரட்டு என்ற உரைநடை நூலையும் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
ஈழ நாட்டைச் சார்ந்த ஞானப்பிரகாச சுவாமியார் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி, தமிழ்ச்சொற்பிறப்பு ஆராய்ச்சி, ஞானசாகரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
கிரால் என்பார் திருக்குறளை செர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
ஏரியல், லேமினேசர் என்னும் அறிஞர்கள் திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு பணிபுரிந்துள்ளார்.
லாசரஸ் என்னும் அறிஞர் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த 2000 பழமொழிகளை நூலாக வெளியிட்டார்.
பாப்ரீசிரியஸ் பேச்சு வழக்குச் சொற்களைத் தொகுத்து விரிவான அகராதி ஒன்றை வெளியிட்டார்.
பெர்சிவல் எழுதிய 67000 சொற்கள் அடங்கிய அகராதியை வின்சுலோ பெரும் பொருட்செலவில் புதுப்பித்துள்ளார்.
வைணவ சமயத்திலிருந்து தமது முப்பதாம் வயதில் கிறித்தவ மறைக்கு வந்தவர் எச்.ஏ. கிருட்டினனார். தன் பெயரை ஹென்றி ஆல்பிரட் என மாற்றிக் கொண்டார். இரட்சணிய யாத்திரிகம் என்ற இலக்கிய இன்பம் நிறைந்த காவியத்தை தமிழுலகிற்கு அளித்தார். இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள், போன்ற செய்யுள் நூல்களை எழுதியுள்ளார். கிறித்தவக் கம்பர் என இவர் அழைக்கப்டுகிறார்.
தமிழ் மொழியில் முதல் புதினமாக பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை வேநாயகம் பிள்ளை இயற்றினார். இவர் எழுதிய நீதி நூல் 45 அதிகாரங்களைக் கொண்டது.பெண் மதிமாலை, சர்வ சமயச் சமரசக் கீர்த்தனை, நீதிநூல், தேவமாதா, திருவந்தாதி, சத்திய வேதக்கீர்த்தனை, திருவருள்மாலை, தேவ தோத்திரமாலை, திருவருளந்தாதி போன்ற நூல்களை எழுதி தமிழ் இலக்கியத்திற்கு அரும் தொண்டாற்றியுள்ளார்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கருணமிர்த சாகரம் என்ற இசை நூலை படைத்தளித்தார். இசை பேரிலக்கணம் என்ற நூல் எழுதி இசையின் இன்பத்தை எல்லாரும் பருகச் செய்தார்.
வேதநாயகம் சாஸ்திரியார் நாடக இலக்கியத்திற்குத் தொண்டாற்றியுள்ளார். பெத்லகேம் குறவஞ்சி சென்னைப் பட்டணப் பிரவேசம், ஞானத்ச்சன் நாடகம் போன்ற நாடக நூல்களை இயற்றினார். ஞான ஏற்றப்பாட்டு, ஞானக்கும்மி, பராபரன்மலை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
சேவியர் தனிநாயகம் அடிகளார் தனிப்பெரும் தமிழறிஞர், மலேயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தோற்றுவித்து, அங்கு முதல் தமிழ்த் துறைத்தலைவராக அரும்பணியாற்றினார்.
எல்லீசரின் விருப்பப்படி தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பழம்பெரும் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக் கொணர்ந்தவர் முத்துச்சாமி பிள்ளையாவார், முத்துச்சாமிபிள்ளை வீரமாமுனிவர் வரலாற்றை தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி வெளியிட்டார்.
சாமுவேல் பிள்ளை என்ற தமிழறிஞர் தொல்காப்பியம் மூலம் முழுவதையும் நன்னூல் மூலத்தைச் சேர்த்து தொல்காப்பியம் நன்னூல் என்ற நூலை 1858இல் எழுதினார்.
ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற மிகப்பெரிய தமிழ் இசைநூலை தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்தார். இன்பக்கவி என்பார் குறவஞ்சி நாடகம் எழுதி பெருமை சேர்த்தார்.
அந்தோணிக்குட்டி அண்ணாவியார் இயேசுநாதர் மீது உருக்கமான பல பாடல்களை பாடி நூலாக வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகிற்கு கிறித்தவ அறிஞர் பெருமக்கள் செய்த தொண்டுகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று கல்விக் கண் திறக்கும் எண்ணற்ற கல்லூரிகள், பள்ளிகள், பிணி அகற்றி நலமளிக்கும் கணக்கற்ற மருத்துவமனைகள், சமுதாய பணி ஆற்றிட பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கைவிடப்பட்டோருக்காக பற்பல சேவை இல்லங்கள் மூலம் கிறித்தவர்கள் ஆற்றிவருகிற அளப்பரிய சேவைகளை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
துணை நின்ற நூல்கள்
1) தமிழ் இலக்கிய வரலாறு
எம்.ஆர். அடைக்கலசாமி
துணைத்தமிழ்ப் பேராசிரியர்
லயோலாக்கல்லூரி, சென்னை
வெளியீடு : திருநெல்வேலி தென்னிந்திய
நூற்பதிப்புக்கழகம்,
154 டி.டி.கே.சாலை, சென்னை -18
1960 ஆம் ஆண்டு
2) தமிழ் இலக்கியவரலாறு
முனைவர் பெ.சுயம்பு
தமிழ் இணைப்பேராசிரியர்
ஆதித்தனார் கல்லூரி
திருச்செந்தூர்
வெளியீடு: பாரதி பதிப்பகம்
113, இராஜீவ் நகர், திசையன்விளை
பதிப்பு மே 2006
3) தமிழ் இலக்கிய வரலாறு
முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழூர்.
வெளியீடு : மணிவாசகர் பதிப்பகம்
31.சிங்கர் பாரிமுனை
சென்னை - 600108, ஆகஸ்ட் - 1999
4) தமிழ் இலக்கிய வரலாறு
முனைவர் தமிழண்ணல்
வெளியீடு : மீனாட்சி புத்தக நிலையம்
மய10ரா வளாகம்,48 தானப்ப முதலிதெரு
மதுரை - 625001. மே 2010.
அருட்சகோதரர். ஜெயசீலன




Spiritual Category
Religious Category
COMMENTS