இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா அந்நாட்டின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9ல் அணுகுண்டுகளை வீசியது.
இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் தன்மை காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புக்களைச் சந்தித்தார்கள். 79130 பேர் காயப்பட்டார்கள். 30524 பேர் சிதைந்து போனார்கள். 3677 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது காணவில்லை. அந்தக் குழந்தைகளில் ஒருவர் தான் சசாகி. 1943 ஜனவரி 7ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது அவருக்கு இரண்டே வயது தான்.
ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது அணுகுண்டு விழுந்த இடத்தில் இருந்து சுமார் 1.7 கி.மீ தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா ஒடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன் தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால் அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமாக வளர்ந்தார் சசாகி.
அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும் காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் எற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சசாகி. அவளைக் காண வந்த தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.
1000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி நோய் பாதிப்புக்கு இடையிலும் 1000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினார் சசாகி. எனினும் அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி.
அதன் பின்னர் அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக 1958ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் ப10ங்காவில் தங்கக் கொக்கை சுமந்துநிற்கும் சசாகிவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை.
‘இதுதான் எங்கள் கூப்பாடு! இதுதான் எங்கள் பிராத்தனை! உலகில் அமைதி வேண்டும்!’
எவ்வளவு வலிமிகுந்த வார்த்தைகள்! தன் இறப்போடு தன் கனவுகளையும் புதைத்துக் கொண்ட அப்படிப் புதைத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளின் பிரதிநிதியான அக்குழந்தை இந்த உலகத்திற்குச்சொல்வதெல்லாம் ஒன்றே. ஒருவரையொருவர்எதிரிகளாக்கிக் கொள்ளும் பகைமையிலிருந்து உலகம் வெளிவர வேண்டும். பகைமைதான் தீர்வு என்றால்இ போர்களே தீர்வுகளை நிர்ணயிக்கும் என்றால் நாம் வாழ்வதற்கென்று உலகம் ஒன்று இனி இருக்கப்போவதில்லை.
ஹிரோஷிமா நினைவகத்துக்குள் சென்றுவந்த கவிஞர் வைரமுத்து தன் எண்ணங்களை இவ்வாறு பதிவுசெய்கிறார்: ‘ஹிரோஷிமா நினைவகத்துக்குள் ஒருமுறை நுழைந்து வெளிவந்தால் போதும் மனித இனத்தின் அகந்தைஇ ஆணவம்இ பழிவாங்ககும் எண்ணம்இ தான் என்ற திமீர் மிருக எச்சம் அத்தனையும் ஒரே தீக்குச்சியில் எரிந்து சாம்பலாகிவிடும். கருகிப்போன கட்டடத்தின் எச்சங்கள். வெந்த நகரத்தின் துண்டுகள்இ அணுகுண்டு வெப்பத்தில் ஆடை இழந்தோடும் மனிதர்கள்இ கூவியழும் குழந்தைகள் இவற்றையெல்லாம் கண்காட்சியில் கண்ணுற்றும் கலங்காத நான்இ ஓரிடம் அடைந்ததும் நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டேன். அங்கே பள்ளிச் சிறுவர்களின் வெந்துபோன தோல்களும் கருகிப்போன நகங்களும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன பார்வைக்கு. அருகில் அணுக்கதிர் துளைத்த ஒரு டிபன் பாக்ஸ். அதிலிருந்து உணவு. வெட்டியெடுத்த நிலக்கரியாய்க் கெட்டிப்பட்டுக் கிடந்தது. பக்கத்தில் பாதி முகம் இழந்த புத்தர் சிலை ஒரு கண்ணால் அழுதுகொண்டிருந்தது புன்னகை மாறாமல்.
ஹிரோஷிமா குண்டு - மூன்று மீட்டர் நீளம் முக்கால் மீட்டர் விட்டம். நாலு டன் எடை கொண்ட அணுகுண்டு - அதன் முதல் வெப்பம் 10000 டிகிரி செல்சியஸ் - பூமியை வந்தடைந்த போது 6000 டிகிரி செல்சியஸ். 38.5 - 40 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் ஒரு மனிதத் தோல் தாங்கும். 100 டிகிரியில் கொதிக்கும் வெந்நீர் கொட்டிவிட்டாலே தோல் கருகி உதிர்ந்துவிடும்.
ஏ மனித ஜாதியே இன்பம் துன்பம் - வெற்றி தோல்வி - இளமை
முதுமை - உறவு பிரிவு - ஆக்கம் அழிவு - ஜனனம் மரணம் மாறி மாறிச் சுற்றுவதே வாழ்க்கைச் சக்கரம். நெல்லிக்காயின் கசப்புக்கடியில் குடியிருக்கும் ஒரு சொட்டு இனிப்பைப் போல நம்பிக்கையின் ஆழத்தில் உள்ளது வாழ்வின் ரகசியம் என்று திட வார்த்தையில் பேசுகிறது ஹிரோஷிமா.’
அமெரிக்கா 1945ல் தன் இரண்டு அணுகுண்டுகளால் ஒரு நாட்டையே சீர்குலைக்க முடிந்ததென்றால்இ அதன் தற்போதைய பலம் எவ்வளவு என்று கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அமெரிக்கா தொடர்ந்து உலக வல்லரசுகளாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இங்கிலாந்து. ஜெர்மனிஇ ரஷ்யாஇ சீனாஇ இந்தியாஇ பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் அணுகுண்டு சோதனைகளைச் செய்து தங்களை வல்லரசுகள் பட்டியலில் இணைத்துக் கொண்டு பெருமிதம் அடைந்துள்ளன.
அணுகுண்டுகளையும் கடந்துஇ அவற்றை விட அதிகமான பேராபத்துக்களை விளைவிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளை கடந்த ஆண்டு சோதனை செய்து பார்த்தது வடகொரியா. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அது விடுத்த எச்சரிக்கை அது!
இந்நாடுகளின் செய்கைகள் உணர்த்துவதெல்லாம் ஒன்றே! ஒருவேளை மூன்றாம் உலகப்போர் ஒன்று ஏற்படுமானால் அல்லது அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகளுக்குள் பகைமை ஏற்பட்டால் அந்த நாடுகள் அனைத்தும் சுடுகாடுகளாய் மாறிப்போவது நிச்சயம் நடந்தேறும். ஆகஸ்ட் 29ஆம் நாளை அணுஆயுதச் சோதனைகளின் எதிர்ப்பு நாளாக ஐநாசபை
கொண்டாட அழைப்பு விடுத்தாலும்இ அணுஆயுதங்களை உற்பத்தி செய்கிறஇ தங்கள் படைபலத்தின் சிம்மசொப்பணமாக அவற்றைக் கருதுகின்ற நாடுகள்தான் ஐநா சபையில் சட்டப்பூர்வமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன என்பது இந்த உலகம் சந்திக்கும் முரண்.
‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ போல இது இருப்பினும் அணுஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் வழியாக இவ்வுலகம் இன்னொரு முறை அணுகுண்டுகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் எனில் அதுவே இவ்வுலகம் எதிர்பார்க்கும் அமைதியாக இருக்கும். அணுஆயுதம் மனித அறிவு உமிழ்ந்த சாபம்! இன்னொரு ஹிரோஷிமாஇ இன்னொரு நாகசாகி ஒன்று ஏற்படுமானால் அது உலகத்தின் அழிவு என்பதைத் திண்ணமாய் உணர்ந்து அணுஆயுதங்களுக்கெதிரான குறைந்தபட்ச அறிவைப்பெற்றுஇ பெற்ற அறிவைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை மானிடர் அனைவருக்கும் உரித்தானது. உயிர்களின் குறைந்தபட்சக் கடமை என்பது வாழ்தல்இ அதிபட்சம் வாழ்வித்தல்இ அணுஆயுதங்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்று நம்மையும் காத்துக்கொண்டு. பிறரையும் வாழ்விக்கும்மானுடக்கடமையாற்றப் புறப்படுவோம்.
அருட்தந்தை.தினகரன்
பேராயர் இல்லம்.
COMMENTS