உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக்:6:36).
இரக்கமுள்ள தந்தையின் பிள்ளைகளாக நாம் இந்த இரக்கத்தின் ஆண்டிலே வாழ அழைக்கப்படுகிறோம். தாயைப் போல பிள்ளை என்பார்கள். நாம் தந்தையை போல எப்படி இரக்கமுள்ளவர்களாக வாழ்வது? சிந்திப்போம.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இரக்கம் பற்றி கூறும் போது இவ்வாறு கூறுகிறார்...
உடன்படிக்கையின் மக்களாக விளங்கிய இஸ்ரயேலர் தாங்கள் இறைவனோடு செய்திருந்த உடன்படிக்கையைப் பலமுறை மீறி நடந்தார்கள். தங்களது நம்பிக்கைக் கேட்டை அவர்கள் உணர்ந்த போது இறைவனின் இரக்கத்தை நாடினார்கள். மக்கள் உள்ளம் நொறுங்கித் தம்மிடம் மனதார திரும்பி வரும்பொது அவர்களை அருள்நிலைக்கு மீண்டும் கொண்டு வருகிறார்.
இந்த தந்தையின் மனநிலை நமக்கு இருக்கிறதா? பிறரின் நம்பிக்கை கேடான செயல்களையும் வஞ்சகங்களையும் நம்மால் மன்னிக்க முடிகிறதா? இறை தந்தையின் இரக்கம் நம்மில் வெளிப்பட வேண்டும் என்றால் நாம் மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இறை தந்தையை முழுமையாக பின்பற்றியவர் இறைமகன் இயேசு கிறிஸ்து. அவர் பாவிகளை முழுமையாக மன்னித்தார்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று போதித்து மக்களை இரக்கமுடையவர்களாக வாழ அழைப்பு விடுத்தார். இரக்கத்தின் செயல்பாடுகளாக ஒரு சிலவற்றை முன்வைக்கிறார்...
- பசியாய் இருப்போருக்கு உணவு கொடுத்தல்.
- தாகமாய் இருப்போரின் தாகத்தை தணித்தல்.
- அன்னியராக இருப்போரை ஏற்றுக் கொள்ளுதல்.
- ஆடையின்றி இருப்போருக்கு ஆடை வழங்குதல்.
- நோயுற்று இருப்போரை கவனித்து கொள்ளுதல்.
- சிறையில் இருப்போரை சந்தித்தல்.
இவற்றில் எவற்றையெல்லாம் செய்திருக்கிறோம்?
தன் குஞ்சுகள் வாழ தன் இதயத்தை குத்தித் திறந்து குருதியைக் குடிக்கக் கொடுக்கிறதாம் பெலிக்கன் என்ற பறவை.
துணைப் பறவையின் சாவுக்காக ஏங்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறதாம் அன்றில் பறவை.(மேதகு பேராயர். அந்தோனி பாப்புசாமி)
தலைவர் - கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை
இந்த பறவைகளிடம் இருக்கின்ற இரக்க குணம் கூட இன்று நம்மிடம் இல்லை. இரக்கச் செயல்பாடுகள் நமது இல்லத்தில் இல்லாத போது சமுதாயத்தில் எப்படி இரக்கச் செயல்கள் வெளிப்பட முடியும்.
நமது பெற்றோர்கள் எத்தனை பேர் முதியோர் இல்லத்தில் ஆதரவற்று இருக்கிறார்கள்.
நமது தீய பழக்க வழக்கங்களால் பிரிந்து கிடக்கும் குடும்பங்கள் எத்தனை?
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள எத்தனை?
பெற்றோர்களால் அனாதைகளாக் கப்பட்ட குழந்தைகள் எத்தனை? இப்படி நமது குடும்பத்தில் இரக்கச் செயல்கள் இனம் காணப்பட முடியாத அவலநிலைகளை மாற்றுவோம்.
இரயில் பயணத்தில் முதலாம் பெட்டியில் பயணம் செய்தாலும் மூன்றாம் பெட்டியில் பயணம் செய்தாலும் போய் சேர வேண்டிய இடம் போகலாம். நமது வாழ்க்கை பயணமும் அப்படி தான். இரக்கமற்ற வாழ்வு வாழ்ந்து யாருக்கும் பயனின்றி வெறுமையாய் இறப்பதைவிட இரக்கச் செயல்களால் சில இதயங்களை மகிழ செய்து வாழ்ந்தால் நமது விண்ணக பயணம் வெற்றியின் பயணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இறைவனிடமிருந்து அளவற்ற இரக்கத்தை பெற்றுக் கொள்ளும் நாம் இறைவனைப் போல இரக்கம் கொண்டவர்களாய் அன்பு மன்னிப்புää ஏற்றக்கொள்ளுதல் போன்ற பண்புகளால் இவ்வுலகை நிரப்ப இறைவன் அருள்புரியட்டும்.
இவண்,
மேதகு. அந்தோனி பாப்புசாமி
பேராயர் மதுரை கத்தோலிக்க உயர்மறைமாவட்டம்.

Spiritual Category
Religious Category